Ummai Paaduvaen Ummai Thuthipaen

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

1. தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா
சேற்றினின்று என்னை தூக்கினீரே
கன்மலை மேல் நிறுத்தினீரே

2. கண்ணீரில் இருந்த என்னை
களிப்பாக மாற்றினீரே
புது பாடலை எந்தன் நாவில் தந்து
ஜெய கீதம் பாடச்செய்தீர்

3. பலனற்று இருந்த என்னை
பெலன் தந்து நடத்தினீரே
கழுகு போல எனக்கு பெலன் தந்தீரே
கவலைகள் மாற்றினீரே

4. தள்ளாடி நடந்த என்னை
தவிப்போடு தாங்கினீரே
உமதாவியை தந்து அபிஷேகித்து
உம்மோடு நடக்கச் செய்தீர்

5. வெறுமையாய் இருந்த என்னை
வெற்றியாய் வாழச் செய்தீர்
செல்வங்களை எனக்கு தந்தீரையா
செழிப்பாக வாழ்ச் செய்தீர்

6. கைவிட்ட வேளையிலே
கரம் பிடித்து நடத்தினீரே
மார்போடு சேர்த்தென்னை அணைத்துக்கொண்டு
மகிமையில் நிறுத்தினீரே


Ummai paaduvaen ummai thuthipaen
Nanmaiyaana yeevugalai thntheeraiyaa

Sthothiram vallamai thuthiyum gnanamum
Kanamum magimaiyum belanum endrendrum undaagathum

1. Thaalmaiyil iruntha ennai
Kannoki paartheeraiyaa
Sethrinindru ennai thookineerae
Kanmalaimael niruthuneerae

2. Kaneeril iruntha ennai
Kalipaaga maatrineerae
Puthu paadalai enthan naavil thanthu
Jeya geetham paada seitheer

3. Balanathru iruntha ennai
Belan thanthu nadathuneerae
Kalugu pola enaku belan thantheerae
Kavalaigal maatrineerae

4. Thalaadi nadantha ennai
Thavipodu thaangineerae
Umathaaviyai thanthu abhisegithu
Ummodu nadaka seitheer

5. Verumaiyaai iruntha ennai
Vetriyaai vaalai seitheer
Selvangalai enaku thantheeraiyaa
Selipaaga vaala seitheer

6. Kaivitha velaiyilae
Karam pidithu nadathuneerae
Maarpodu serthennai anaithukkondu
Magimaiyil niruthuneerae