உலகத்தை வென்று இயேசு உயிர்த்தார் ஆர்ப்பரி
காலத்தை வென்று வெற்றிச் சிறந்தார் ஆர்ப்பரி
அழகினை வென்று அகிலம் சிறந்தார் ஆர்ப்பரி
இயேசுவே தேவன் என்று முழங்கி ஆர்ப்பரி ஆர்ப்பரி ஆர்ப்பரி
- யெகோவா நிசி அல்லேலூயா
யெகோவா சபயத் ஓசன்னா (3)
அல்லேலூயா ஓசன்னா (4)
வழியென்று சொன்னவர் வழியாக வந்தவர் இயேசு ஒருவரே
அற்புதமாக அவனியில் வந்தவர் இயேசு ஒருவரே (2)
பாவமே இல்லா பரிசுத்தரானவர் இயேசு ஒருவரே
அதிசய அற்புத நன்மைகள் செய்தவர் இயேசு ஒருவரே (2)
- யெகோவா நிசி அல்லேலூயா
யெகோவா சபயத் ஓசன்னா (3)
அல்லேலூயா ஓசன்னா (4)
தனிப்புகழ் பெற்றவர் தனித்தன்மை வாய்ந்தவர் இயேசு ஒருவரே
அழிந்திடாத உன்னத வார்த்தைகள் சொன்னவர் இயேசு ஒருவரே (2)
நீடித்த பெயரும் நிலையாய் பெற்றவர் இயேசு ஒருவரே
ஆத்மிக தாகம் தீர்த்திட வல்லவர் இயேசு ஒருவரே (2)
- யெகோவா நிசி அல்லேலூயா
யெகோவா சபயத் ஓசன்னா (3)
அல்லேலூயா ஓசன்னா (4)
வசனங்கள் நிறைவேற சரித்திரம் படைத்தவர் இயேசு ஒருவரே
மரணத்தை வென்று ஜெயமாக நின்றவர் இயெசு ஒருவரே (2)
சீக்கிரம் மீண்டும் வருவேன் என்றவர் இயேசு ஒருவரே
இருதயங்கள் மாற்றி புதுவாழ்வு தருபவர் இயேசு ஒருவரே (2)
- யெகோவா நிசி அல்லேலூயா
யெகோவா சபயத் ஓசன்னா (3)
அல்லேலூயா ஓசன்னா (4)