பெற்ற தாயும் எந்தன் தந்தையும் ஆனவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும்
என்றும் வாக்குமாறாதவரே
ஆ ஆனந்தமே ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுமே
இயேசுவே எந்தன் ஆருயிரே
அஞ்சிடேன் ஆஞ்சிடேன் என் இயேசு என்னோடு இருப்பதால் (2)
மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில்
கர்த்தர் என்னோடிருந்து தேற்றினார் தம் தோளினால் (2)
பாத்திரம் நிரம்பி வழிய ஆவியால் அபிஷேகித்தார் (2)
ஆ ஆனந்தமே ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுமே
இயேசுவே எந்தன் ஆருயிரே
அஞ்சிடேன் ஆஞ்சிடேன் என் இயேசு என்னோடு இருப்பதால் (2)
அலைகள் படகின் மேல் மோதியே ஆழ்த்தினாலும்
கடல் மேல் நடந்து வந்து கர்த்தரே என்னைத் தூக்கினார் (2)
அலைகள் நீக்கியவர் அமைதி படுத்தினார் (2)
ஆ ஆனந்தமே ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுமே
இயேசுவே எந்தன் ஆருயிரே
அஞ்சிடேன் ஆஞ்சிடேன் என் இயேசு என்னோடு இருப்பதால் (2)